நடிகர் சூர்யா, இவரைப்
பற்றி சொல்லித் தெரிய
வேண்டியதில்லை . பல வெற்றிப்
படங்களின் மூலம் தன்னை தமிழ்
சினிமாவில் தக்க வைத்திருக்கும்
ஒரு நடிகர் . தான் ஆரம்பித்த அகரம்
ஃபவுண்டேசன் மூலம் பல ஏழைகளின்
படிப்புகளுக்கு உதவி செய்பவர் .
இவை மட்டும்தான் மேலோட்டமாக
தமிழர்கள் மனதில் பதியப் பட்ட
விடயங்கள் .
எல்லாம் சரிதான் இப்போது அவர் கைக்
கோர்த்திருப்பது முதலாலித்துவ
வியாபாரிகளான சரவணா ஸ்டோர்சுடன் .
சரவணா ஸ்டோர்ஸின்
ஆளுமைக்கு தீனி போட அவர்களால்
புரசைவாக்கத்தில் பெரிய
கிளை ஒன்றுத் திறக்கப் பட்டுள்ளது.
அதற்கு விளம்பர தூதராக அறிவிக்கப்
பட்டிருப்பவர்தான் இந்த நடிகன் .
இந்த நடிகனால் ஆரம்பிக்கப் பட்ட
அகரம் ஃபவுண்டேசன் மூலம் இந்த
ஆண்டு ப்ளஸ் -டூ தேர்வில்
வெர்றி பெற்றவர்கள் அவர்களின் மேல்
படிப்புக்கு ஆகும் செலவை தாராளமாக
எங்களிடம் கேளுங்கள் நாங்கள்
உதவுகிறோம் என அவரேக்
கூறியிருந்தார் .
ஏன் சூர்யா, அந்த
சரவணா ஸ்டோர்ஸில் வேலைப்
பார்ப்பவர்களில் படிப்பார்வம்
மிக்க படிக்கவியலாப் பிள்ளைகள்
இருப்பது உங்கள் கண்களுக்குத்
தெரியவில்லையா ?
அவர்கள் அடிமைகள் போல் கால்
கடுக்க பல மணி நேரம்
பணி புரிவது நியாயம் என
தோன்றுகிறதா ?
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தினர்
அடிமட்டத்திலிருந்து பெரிய
நிலைக்கு வந்தவர்கள் , என்னைப்
போலவே (?!).
அவர்களது நிறுவனத்துக்கு நான்
விளம்பரத் தூதராக
இருப்பது பெருமைக்குரியது எனக்
கூறியிருக்கிறான் அந்த நடிகன் .
கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்க்ள்
முதலாலித்துவம் காட்டலாம்
என்று சொல்கிறீர்களா ?
தான் நடிக்கும் படங்களுக்கான
சம்பளத்தில்
பத்து சதவீதத்தை ஏழைகளுக்குத்
தருவதாகக் கூறியுள்ளவர்தான் இந்த
நடிகன் . நீங்கள்
அவ்வாறு கொடுப்பதை விட இது போன்ற
முதலாளிகளுக்குத்
துணை போகாமலிருப்பதே சிறந்தது .
முன்னர் இதே நடிகன்
பெப்ஸி விளம்பரத்தில் நடித்தார்.
போபால் ஆண்டர்சனை விடக்
கொடியவர்க்ள் இந்த பெப்ஸி கோக்
நிறுவனத்தார் . ஆய்த எழுத்துப்
படத்தில் ஒரு வசனம் வரும் "உங்க
நிலத்துத் தண்ணிய
உறிஞ்சி காசு பாத்து பழகிட்டாங்க.
எப்புடித் தடுக்கப் போறீங்க?"
என்றவாறு. இதைப் பேசியவர் அந்த
சூர்யாதான்.
இது போன்று படத்தில் பேசும்
வசனங்களைக்
கண்டு நடிகனுக்கு கொடிப் பிடித்த,
பிடித்து கொண்டிருக்கும்
பல்லாயிரக் கணக்கான முட்டாள்களில்
நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன்
என்பதை நினைக்கும் போது கொஞ்சம்
வெட்கமாக இருக்கிறது . பணத்திற்காக
எதுவும் பேசுபவன்தான் நடிகன்.
மது அருந்துவதை மகா குற்றம் என
சொல்லும் இவரின்
தந்தைக்கு பெப்ஸி , கோக்
குடிப்பது நியாமாகத்
தெரிந்திருக்கிறதா ?
மனித ரத்தத்தை உறிஞ்சும்
அத்தகையக் குளிர்பான
வியாபாரிகளுக்குத் தன் மகன்
குடை பிடிப்பதை ஆதரிப்பது நியாயம்
தானா ?
இவையனைத்தும் மனிதத்திற்கு எதிரான
செயல்களே . அதில் நான்
சொல்லியிருப்பது கொஞ்சமே.
இது போன்று மனிதத்திற்கு எதிராக
செயல்படும் jநடிகர்கள் மனிதத்
துரோகிகளே !
Wednesday, June 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment