Tuesday, August 3, 2010

என் ஆன்மா தொலைந்துவிட்டது

எனது ஆன்மா காணாமல் போய்விட்டது...

நேற்றுவரை
என்னுடன் ...
இருந்த ஆன்மா..
இன்று தூக்கத்தால்
எழுந்து பார்த்தபோது
காணாமல் போய்விட்டது...
இரவில்
உறங்கும்போது
தொலையக்கூடிய
என் ஆன்மா பார்ப்பதற்கு
பின்வருமாறு இருக்கும் ...
அன்பானது...
அறிவானது...
அமைதியானது...
இனிமையானது...
இரக்கம் மிக்கது...
குழந்தை போன்றது..
குழப்பம் விளைவிக்காதது...
விளக்கங்கள் கேட்காதது...
ஆன்மா கடைசியாக உடுத்தியிருந்த உடை
பேரன்பில் நெய்த நிறமற்ற ஆடை ...
அன்பனின் ஆன்மாவை
ஒன்லைனில் கண்டவர்கள்
ஒப்படைக்கவேண்டிய முகவரி...
கலைஞன், ஆண்டவன் சந்நிதி....
தேடிக் கண்டுபிடித்து தருபவரிற்கு
குடியிருக்க இதயம் ஒன்று பரிசாகத்
தரப்படும் ...
ஓடிவிட்ட ஆன்மாவே விரைவில்
வீடு வந்து சேருவாய் ..
சுவாசப்பைகளில்
உனக்கு பிடித்தமான
ஒட்சிசன் காற்றை நிறைத்து
உயிரிற்காக காத்திருக்கின்றேன்...
இப்படிக்கு,
வெற்று உடல்..
பி/கு:
காவல்துறைக்கு புகார்செய்வது தவிர்க்கப்பட்டுள்ளது!..